Sunday, July 10, 2011

மேலப்பாளையத்தில் மறைந்து வாழும் மகான்கள்

மேலப்பாளையத்தில் மறைந்து வாழும் மகான்கள்
 
1 . ஆஷிக் ரசூல் மாமேதை மகான் பஷீர் அப்பா (ரலி)  - கடைய ஜும்மா பள்ளி அருகில் 
 2 . கோஜு முஹமது அப்பா (ரலி)  - புதுமனை பள்ளி வாசல் பள்ளி
3 . மஹ்மூது மௌலானா (ரலி) - புதுமனை பள்ளி அருகில்
4 . ஹாஜி செய்யது முஹமது (ரலி) - பஷீர் அப்பா தர்கா எதிரில்
5 .கம்மஞ்சி ஹஸரத் (ரலி) - கடைய ஜும்மா பள்ளி செல்லும் வழியில்
6 .செய்யது அபூபக்கர் (ரலி) - பஜார் திடல்
7 .மதினா சாஹிப் (ரலி) - இப்ராஹீம் ஷா தங்கள் தைக்கா தெரு
8 .ஷா ஆலம் தங்கள் (ரலி) - முஹமது லெப்பை தெரு
9 .சம்சுதீன் அப்பா (ரலி) -      நவாப் பள்ளி
10 .அஹமது சாஹிப் (ரலி) - நவாப் பள்ளி
11.செய்யது முஹமது அப்பா (ரலி) - நவாப் பள்ளி அருகில்
12 .முஹமது தம்பி (ரலி) - நவாப் பள்ளி அருகில்
13 . முஹமது பாத்திமா (ரலி) - நவாப் பள்ளி அருகில்
14 .கல்வத் கலீபா முஹமது யூசுப் (ரலி) - ஷெய்குல் அக்பர் தெரு
15.மாதிஹூர் ரசூல் வாப்பா (ரலி) - ஷெய்குல் அக்பர் தெரு
16 .ராபியா அம்மா (ரலி) - ஷெய்குல் அக்பர் தெரு
17 .செய்யது முஹமது புஹாரி ஐதுரூஸ் (ரலி) - நைனா மூப்பன் பள்ளி தெரு
18 .சேமர் பெத்தப்பா (ரலி) - நைனா மூப்பன் பள்ளி தெரு
19 .கோட்டார் முஹமது அபுல் காசிம் (ரலி) - தண்டன் லெப்பை தெரு
20  .கோட்டார் ஷாகுல் ஹமீது (ரலி) - தண்டன் லெப்பை தெரு
21 .அப்துல் காதர் சாஹிப் (ரலி) - வாவர் பள்ளி அருகில்
22 .தக்கடி பெத்தப்பா (ரலி) - ஆண்டவர் தெரு
23 .மஸ்தான் சாஹிப் பெத்தப்பா(ரலி)  - வடக்கு தைக்கா தெரு மேற்கு
24 . அப்துர் ரஹ்மான் ஐதுரூஸ் தங்கள (ரலி) - பெரிய தெரு மேற்கு
25 .பூ அலி ஆலிம்ஷா (ரலி) _ கலுங்கு சின்ன மித்தீன் தெரு
26 .பூகோயா தங்கள் (ரலி)    - கலுங்கு சின்ன மித்தீன் தெரு
27 .புலவர் ஷெய்கு மீரான் சாஹிப் (ரலி) - அத்தியடி தெரு கிழக்கு
28 .ரஸாத் பாவா (ரலி) - வாட்டர் டேங்  அருகில்
29 .ஷாகுல் ஹமீது தங்கள் (ரலி) - கருப்பட்டி தெரு
30 .கோஜு முஹமது ஹசன் (ரலி) - வெள்ளை கலீபா சாஹிப் தெரு
31 .கலீபா ஐதுரூஸ் ரிபாய் (ரலி) - வெள்ளை கலீபா சாஹிப் தெரு
32 .அபூபக்கர் பம் (ரலி) - பெரிய கொத்பா பள்ளி அருகில்
33 .ஜைனுல் ஆபுதீன் தங்கள் (ரலி) - L .K .S .தெரு
34 . பக்கீர் முஹமது மஸ்தான் (ரலி) - பெரிய கொத்பா பள்ளிக்கு மேற்கு


 

Thursday, June 16, 2011

மேலப்பாளையத்தின் அன்றைய நிலை

மேலப்பாளையத்தின் அன்றைய நிலை
தொழில் :
இந்த ஊரில் குடியேறிய மக்களில் பெரும்பாலோர் வெளிஊர்வாசிகளே. வடகரை, உடன்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து குடியேறினார்கள் இங்கு பெரும்போலோர் நெசவு தொழில் செய்து வந்தனர் இத் தொழிலில் ஈடுபடும்போது திக்ரு செய்து கொண்டே நெசவு செய்வார்கள் பெண்கள் சில பேர் பீடி ஓட்டும் தொழில் சிலபேர் பீடி சுற்றும் தொழில் செய்துவந்தனர்.
ஒற்றுமை :
அன்றைய மக்கள் தொழுகையை தொழாவிட்டாலும் இறைவனுக்கு பயப்படுவார்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டாலும் கூட வீட்டில் ஏதாவது விசேசங்களுக்கு அல்லது பெருநாள் போன்ற சந்தோஷமான நாட்களில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் அது மட்டுமல்லாமல் அல்லாஹ் ரசூலுக்காக மன்னித்துவிடு என்று கூறிவிட்டால் எந்த ஒரு பெரிய சண்டை என்றாலும் மன்னித்து விடுவார்கள் மறந்து விடுவார்கள் வாசலில் வந்து தர்மம் கேட்கும் நபர்களுக்கு இல்லை என்று கூறாமல் கொடுப்பார்கள் கொடுக்க முடியாவிட்டால் கூட மாப் செய்யுங்கள் என கூறுவார்கள் அதாவது மன்னித்து விடுங்கள் என உருது கலந்து பேசுவார்கள். பெருநாள் போன்ற நாட்களிலும் கூட வீணான பொழுதாக ஆக்காமல் அன்றைய நாளில் கூட இறைவனை நினைவு கூறும் நோக்கத்தில் தப்ஸ் எனும் கொட்டடித்து அல்லாஹ், ரஸூல், வலிமார்கள் இவர்கள் மீது பாடல் இயற்றி புகழ்ந்த வண்ணம் கொண்டாடுவார்கள். ஆரம்ப கால கட்டத்தில் கலிபாக்களின் தலைமுறையினர்  மிசர் தேசத்தில் இருந்து  வந்ததால் தப்ஸ் அடித்து புகழ்வது  மிசர் தேசத்திலும் அங்குள்ள அராபிய நாடுகளிலும் உள்ள பழக்க வழக்கமாகும்   சினிமா படம் வந்த காலத்திலும் கூட ஊர் ஒன்று கூடி சினிமா பார்க்க கூடாது என தங்களுக்கு தாங்களே தடை செய்து சட்டம் போட்டுக்கொண்டனர் மீறி பார்க்க செல்பவர்களுக்கு அபராதம் போட்டு வந்தனர்  மேலும் மீலாது நபி மற்றும் வலிமார்கள் நினைவு தினங்களை கொண்டாடி மகிழ்வதோடு அல்லாமல் ஊரில் ஒன்று சேர்ந்து சமைத்து சாப்பிடுவார்கள் இதில் வசதி உடையவர்கள் அரிசி, பருப்பு, கறி  போன்ற உணவு பொருட்களை கொடுத்து விடுவதால் வீடுக்கு வீடு உணவுக்கு ஆகும் பணத்தை குறைவாக வாங்கி எளியோரும் குறைவான பணத்தில் உயர்ந்த  மணமான உணவை வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
 
விளையாட்டுக்கள்
விசேஷமான நாட்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் விளையாடுவார்கள், கபடி போன்ற விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்வார்கள் பெண்கள் தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதாக கூறப்படுகிறது
 
வெளிநாடு போக்குவரத்து
ஆண்கள் பர்மா ரங்கூன் போன்ற இடங்களில் வாணிபம் செய்து வந்தார்கள் அங்குள்ள உணவு இடியப்பம் வட்டிலாப்பம் இது தான் மேலப்பாளையத்தில் இன்றும் உயர்ந்த உணவாக உள்ளது பிறகு மலேசியா சிங்கபூர் செல்ல ஆரம்பித்தார்கள் அங்கு சென்றதால் அங்கு பேசப்படும் மொழிகளையும் கலந்து பேச ஆரம்பித்தார்கள் உதாரணமாக ஓகே என கூறுவது என்றால் ஓகே லா என லா சேர்த்து தான் பேசுவார்கள் இது நம்ம ஊர் பழக்கத்தில் போ அல்லது வா என கூறுவது என்றாலும் போ லா  வா லா என பேசுவதே இதற்க்கு காரணமாக உள்ளது பிறகு 1980 வருடத்திற்கு பிறகு சவூதிக்கு செல்ல ஆரம்பித்தார்கள் சவூதி ஏழ்மை நிலையிலிருந்து பெட்ரோல் கிடைக்க பெற்ற பின் சவூதி செழிப்போங்கியது ஆரம்ப கால கட்டத்தில் கலிபாக்களின் தலைமுறையினர்  மிசர்தேசத்தில் இருந்து கேரளா வழியாக நமது ஊர் வந்தார்கள் இதுபோன்று ஏழ்மை இன் காரணமாகவும் ஆரம்ப காலத்தில் நிறையப்பேர் புறப்பட்டுவிட்டனர் மிசர் கட்டுப்பாடில் இருந்த மக்கா மதீனாவும் சவூதிக்கு சேர்ந்து விட்டதால் மிசர் தேசத்திற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மட்டுமே மிஞ்சியது ரியாத்தை தலை நகராக கொண்ட சவூதிக்கு மக்காவும் மதீனாவும் சொந்தமாகிவிட்டது சவூதிக்கு சென்ற நமது ஊர் மக்கள் சவூதி அரபியாவின் கலாச்சாரம்  இவர்களை தொற்றிக்கொண்டது சவூதி செழிப்போங்கிய காரணத்தால் 1400  வருடம் கழித்து சென்ற நம்ம ஊர்வாசிகளுக்கு புதிய கலாச்சாரத்தை பார்த்து இது தான் இஸ்லாமி நாடு என அங்கு சென்று வந்த பிறகு நமது ஊர் மக்களின் பழைய வாழ்க்கை, ஒற்றுமை மறைந்து வருகிறது

தெருக்களுக்கு பெயர் வந்தது எப்படி
ஆங்கில ஆட்சியில் இங்கு குதிரை வீரர்களை ராவுத்தர் என அழைப்பார்கள்  ஆகவே மேலப்பாளையம் ராவுத்தர் தெருவில் குடி இருந்ததால் அந்த தெருவிற்கு ராவுத்தர் தெரு என பெயர் வந்ததாக கூறப்படுகிறது மேலும் பல நல்லோர்கள் வந்து சென்றதாலும், பல நல்லோர்கள் இங்கு வாழ்ந்து மறைந்ததால் அவர்களின் பெயர்களும் தெருவிற்கு பெயராக அமைந்தது

இன்னும் நீங்கள் அறிந்ததை தெரியப்படுத்தவும்

Monday, June 6, 2011

மக்களால் விரட்டப்பட்ட சைத்தான்

 4.11.2011 அன்று டி என் டி ஜே வினர் மேலப்பாளையம் ரஹ்மானியாபுரத்தில் வைத்து கூட்டம் நடத்த முடிவு செய்து மைக் எல்லாம் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்த முயன்றனர் அந்த தெரு மக்கள் இவர்கள் ஆபாசமாக பேசுவார்கள் என்றும் இவர்களால் தான் சமுதாயம் கெட்டுவிட்டது என்றும் மரியாதை  தெரியாமல் பேசுபவர்கள் என்றும் மக்கள் கூட்டம் நடத்தவிடாமல் விரட்டி விட்டனர்

Friday, March 18, 2011

மீலாது விழா போட்டோ

மீலாது விழா நிகழ்ச்சி போட்டோ
                            த. மோகன் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர்

                         த. மோகன் அவர்கள் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர்
                                                    கண் கண்காட்சியை திறந்து வைத்தார்



 ஊர்வலத்தை துவக்கி வைப்பவர் K .பாஸ்கரன் MABL அவர்கள் (மாநகராட்சி ஆணையாளர்)

                                        முகம்மது நிசார் பிலாலி அவர்கள் பாஜில் ஜமாலி 
                                                                 (முதல்வர் பிலாலியா அரபிக் கல்லூரி)

அல்லாமா, அல் ஆரிப்பில்லாஹ், ஆஷிகே ரசூல், அபுல் அம்ஷால், அஷ்ஷெய்கு 
பிலாலிஷாஹ்  ஜுஹூரி  அவர்கள் ஸ்தாபகர் பிலாலியா அரபிக் கல்லூரி  

Monday, March 7, 2011

பொட்டல்புதூர் கொடியேற்று விழா 6 .03 .2011

6 .03 .2011 அன்று பொட்டல்புதூர் கொடியேற்று விழாவிற்கு 4 சிறப்பு பேருந்துக்களை சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது கூட்டம் அதிகம் என்பதால் மேலும் ஒரு பேருந்து  ஏற்பாடு செய்யப்பட்டு 5 பேருந்துகள் மேலப்பாளையம் நகரிலிருந்து புறப்பட்டது வேன், ஆட்டோ, டாக்சி மற்றும் 50  மேற்பட்ட வாகனங்கள் மேலப்பாளையம் நகரிலிருந்து விழாவிற்கு சென்றது
 
கொடியேற்று விழா இதில் லட்சம் பேர் கலந்து கொண்டார்கள் TNTJ வினரே வேன், ஆட்டோ, டாக்சி யில் அழைத்து வந்துள்ளார்கள் வந்ததும் மட்டுமல்லாமல் கொடியேற்றும் இடத்திலும் வந்து நின்றார்கள்

Friday, February 18, 2011

மீலாது ஊர்வலம்

16 .02 .2011 அன்று மீலாது அன்று பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்பட கண்காட்சியும் அன்று மாலை 4 .45 மணியளவில்   V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளியில் இருந்து மீலாது ஊர்வலமும் பல எதிர்ப்புகளையும் தாண்டி சிறப்பான முறையில் நடைபெற்றது 
 
அன்று மாலை 6 .30  மணியளவில்   09 .01 .2011  அன்று முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும்  சான்றிதல்களும் வழங்கப்பட்டது
மெளலவி  N .S .M . மீரான் முஹைதீன் அவர்கள் தலைமையில் மெளலவி அப்துல் மாலிக் சிராஜி ஆலிம் அவர்கள் மிக சிறப்பான ஒரு மார்க்க சொற்பொழிவு செய்தார்கள் இது வஹாபிகளுக்கு சரியான பதிலாக இருந்தது

Sunday, February 13, 2011

௦மேலப்பாளையம் மீலாதுந்நபி விழா

௦மேலப்பாளையம் மீலாதுந்நபி கமிட்டி சார்பாக 04 .02 .2011 அன்று முதல் மஸ்ஜித் காதிரியா,ரஹ்மானியா ஜும்மா பள்ளி, வடக்கு ஆதி முஹைதீன் பள்ளி, மஸ்ஜித் ஆயிஷா, மஸ்ஜித் அலிய்யா,மாப்பிளை லெப்பை ஆலிம் பள்ளி, நவாப் பள்ளி, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்மா பள்ளி, நாகூர் மீரான் ஜும்மா பள்ளி, வாவர் ஹனபி ஜும்மா பள்ளி, மஸ்ஜித் ஸலாஹ்,  V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளி
ஆகிய பள்ளிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது
 
16 .02 .2011 அன்று மீலாது அன்று பஜார் திடலில் இஸ்லாமிய புகைப்பட கண்காட்சியும் அன்று மாலை 4 .45 மணியளவில்   V .S .T .ஹாமீம் ஜும்மா பள்ளியில் இருந்து மீலாது ஊர்வலமும் நடைபெற உள்ளது
 
அன்று மாலை 6 .30  மணியளவில்   09 .01 .2011  அன்று முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாநபி அவர்களின் பிறந்த தினமான ரபியுல் அவ்வல் பிறை 12 ல் பரிசுகளும்  சான்றிதல்களும் வழங்கப்பட உள்ளது 
அதனை தொடர்ந்து மெளலவி  N .S .M . மீரான் முஹைதீன் அவர்கள் தலைமையில் மெளலவி அப்துல் மாலிக் சிராஜி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்பொழிவு ஆற்றுகிறார்கள்