Friday, December 17, 2010

ஆசூரா நாளின் சிறப்பு

1 . நபி ஆதம் (அலை) அவர்களின் பிழையை அல்லாஹு த ஆலா மன்னித்த நாள்
2 .  நபி இத்ரீஸ் (அலை) அவர்களை விண்ணின்பால் உயர்த்திய நாள்
3 . நபி  நூஹ் (அலை) அவர்களின் கப்பலை கரை சேர்த்த நாள்
4 . நபி  இப்ராஹீம் (அலை) அவர்கள் பிறந்த நாள்
5 .நபி  இப்ராஹீம் (அலை) அவர்களை கலீலாக ஏற்ற நாள்
6 .நபி  இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்பு குண்டத்தில் இருந்து காப்பாற்றிய நாள்
7 . நபி  யாகூப் (அலை) அவர்களின் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்த நாள்
8 . நபி  யூசுப்  (அலை) அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்த நாள்
9 . நபி  துன்னூன்  (அலை) அவர்களின் துன்பம் துடித்த நாள்
10 . நபி  யூனுஸ் (அலை) அவர்களை மீன் வயிறிலிருந்து மீளச் செய்த நாள்
11 . நபி  ஐயூப்  (அலை) அவர்களின் நோய்களுக்கு நிவாரணம் அளித்த நாள்
12 . நபி  தாவூத்  (அலை) அவர்களின் பிழைகளை பொறுத்த நாள்
13 .நபி  சுலைமான்  (அலை) அவர்களுக்கு ஆட்சியை மீண்டும் கொடுத்த நாள்  
14 . நபி  மூஸா  (அலை) நபி  ஹாரூன் (அலை) அவர்களுக்கு செவி சாய்த்த நாள்
15. நபி  மூஸா (அலை) அவர்களை நைல் நதி பிளந்து வழிவிட்டு வெற்றி கிடைத்த நாள்
16. நபி  ஈஸா (அலை) அவர்களை உயர்த்தினான்
17 . நபி  கிலுறு  (அலை) அவர்களின் ஞானம் பெருக செய்தான்
18.ஹசன் (ரலி)  ஹுசைன் (ரலி) அவர்களை சஹீது அடைய செய்தான்
19 . சுவனம் நரகம் இந்நாளில் படைத்தான்
20 . வானங்களையும் பூமியும் படைத்தான்
21 .அர்சையும் குர்சையும் படைத்தான்
22 . மலைகளையும் கடல்களையும் படைத்தான்
22 . லவ்ஹ் என்னும் பலகையும் எழுத்து கோலும் படைத்த நாள்
22 . மலைகளையும் கடல்களையும் படைத்த na
23 .ஜிப்ரில், மீக்காயில், இஸ்ராபீல், இஸ்ராயில் (அலை) மலக்குகளையும்  படைத்தான்
 
24 . மேலும் ஆசூரா நாளில் நோன்பிருப்பவர்களை நரக நெருப்பு தீண்டாது
 

Thursday, November 18, 2010

அக்டோபர் செய்தி 2010

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னீர்ரஹீம் 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் ....
 13 .10 .2010  அன்று சனிக்கிழமை இரவு 8 . 00 மணியளவில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை சார்பாக sjap ன் செயலாளர் Er அமானுல்லாஹ் அவர்கள் வீட்டில் செயற்குழு கூட்டம்  நடைபெற்றது இதில் Er . A .P .அப்துல் காதர் BE  அவர்கள் தலைமை தங்கினார்கள்  Er . பஷீர்  V .N .அலி ஹுசைன் மற்றும் SJAP  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
தீர்மானங்கள் :
1 . ஜனாஸா வைப்பதற்கான பிரீஸர் பாக்ஸ்க்கு ரூ 50000 தேவைபடுவதால் நன்கொடை மூலம் ரூ 22000  பெறப்பட்டுள்ளது மேற்கொண்டு பணம் கிடைக்கப் பெற்றவுடன் பிரீஸர் பாக்ஸ் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
2 .சுகாதாரமான முறையில் குர்பானி கொடுப்பது சம்பந்தமாக துண்டு பிரசுரம் வினியோகிப்பது
3 . குர்பானி பங்குத்தொகை என்ற பெயரில் மிக அதிகமான பணம் வசூலிக்கப்பட்டு ஒரு பெரும் வியாபாரம் நடந்து வருவதால் இன்ஷா அல்லாஹ் நம் அமைப்பின் மூலம் நியாயமான முறையில் பங்கு தொகை பெறப்பட்டு குர்பானி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது 
4 .நம் அமைப்பின் உறுப்பினர் v .N .அலி ஹுசைன் அவர்கள் கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனமும் நமது அமைப்பும் சேர்ந்து இன்ஷா அல்லாஹ் இலவச மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது 
5 .விருந்து வைபங்களில் சப்ளை செய்வதற்கு சுன்னத் ஜமாஅத் கேட்டரிங் சர்வீஸ் (SJCS ) என்று ஏற்படுத்தி விருப்பமுள்ள இளைஜர்கள் அந்நிறுவனத்தில் தன்னை ஈடுபடுத்தி வரும் வருமானத்தை பணிபுரிபவர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .
 
அபுல் காசிம் அவர்கள் துஆ ஓதினார்கள் 
 
துல்ஹஜ் 9 , 1431 
செவ்வாய் 16 .11 .2010                                                                                                                                                                                                     V .S .T .அமானுல்லாஹ் 
                                                                                                                    செயலாளர் SJAP
                                                                                                                 மேலப்பாளையம்
 

Tuesday, November 2, 2010

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை-சென்னை

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை - தென் சென்னை மாவட்டம் சார்பில் 31 .10 . 2010 அன்று மலை 6 .00  மணியளவில் சென்னை கிருஷ்ணாம் பேட்டை பக்கீர் லெப்பை மஸ்ஜித்தில் வைத்து மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதை அல்லாமா அல்ஹாஜ் மு.:ப்தி Dr . சலாஹுத்தீன் முஹம்மது ஐயூப் அஸ்ஹரி காதிரி அவர்கள் தலைமையிலும், பக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையிலும்  நடைபெற்றது துவக்கவுரையாக அல்ஹாஜ் S .M .கனி சிஸ்தி நூரி அவர்களும் சிறப்புரையாக மெளலவி அபத்தலாயில் அல்லாமா ஹழ்ரத் M .ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, M .A அவர்கள் தர்ஜுமா தவறுகளும், விபரீத விளக்கங்களும் என்ற தலைப்பிலும், மெளலானா மெளலவி ஹழ்ரத் O .A .முஹம்மது முஹ்யித்தீன் .:பைஜீ பிலாலி அவர்கள் இறைவனும் இறைநேசர்களும் என்ற தலைப்பிலும், மெளலானா மெளலவி ஹழ்ரத் செய்யிது முஸ்தபா அலி மிஸ்பாஹி அவர்கள் உருது பயான் செய்தும், மெளலானா மெளலவி ஹழ்ரத் A .முஹம்மது முஸ்தபா மஸ்லஹி உருவமற்ற இறைவன் என்ற தலைப்பிலும் பேசினார்கள் ஆஷிகே ரஸூல் அல்-ஆரிபுபில்லாஹ் ஹழ்ரத் பிலாலிஷாஹ் ஜுஹுரி அவர்கள் சிறப்பு பேருரையாற்றினார்கள் மெளலவி M . செய்யிது பிலால் ஆமிரி பையாஜி அவர்கள் நன்றி உரை கூறி கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது.
 

Thursday, October 28, 2010

மேலப்பாளையம் உருவான வரலாறு

மேலப்பாளையம் உருவான வரலாறு
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் கலீபாக்களாகிய அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) உஸ்மான் (ரலி) அலி (ரலி)
ஆகியோரின் பரம்பரையினர் மிஸ்ர் தேசம் என்று அழைக்கப்படும் எகிப்தில் 'ஹலரத் மவ்த்' என்ற ஊர் இருந்தது அங்கு வாழ்ந்து வந்தனர் இவர்களின் தொழில் நெசவு செய்வது. இந்த வம்சத்தினர் ஹிஜ்ரி 232  ல் புறப்பட்டு கப்பல் மூலம் இந்தியாவின் தெற்கு பகுதில் உள்ள கேரளா மாநிலத்திலுள்ள கொச்சியை வந்தடைந்தார்கள் ஒவ்வொரு கலீபாவின் வம்சத்திலிருந்து 10  பேர் வந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது இதில்

அலி (ரலி) அவர்கள் பரம்பரையினர்  10  பெரும் கேரளாவிலுள்ள கொல்லம் என்ற பகுதியில் தங்கி விட்டனர் மீதி 3  கலீபாக்கள் தலைமுறையினர் கோட்டாறு, காயல்பட்டினம், இலங்கை, பரங்கிபேட்டை மற்றும்  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மங்கை நகர் என முன்னால் அழைக்கப்பட்ட மேலப்பாளையம் ஊரிலும் வசித்து வர தொடங்கினர்

மங்கை நகர் என்ற மேலப்பாளையம் பாளையம்கோட்டை என்ற  பாளையம் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு மேல் பகுதியில் இருந்ததால் மேலப்பாளையம் என்று அழைக்கப்பட்டது.

இந்த ஊரில் 11 பேர் குடியேறியதாக வரலாறு கூறுகிறது ஏழு குடும்பம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது தர்வேசு, சப்பாணி, தக்கரி என்ற தக்கடி, முஹம்மது லெப்பை, மாயாட்டி, பள்ளி, கட்டை ஆகிய குடும்பம்கள் வாழ்ந்து வந்தார்கள்



தொழில் :
இந்த ஊரில் குடியேறிய மக்களில் பெரும்பாலோர் வெளிஊர்வாசிகளே. வடகரை, உடன்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து குடியேறினார்கள் இங்கு பெரும்போலோர் நெசவு தொழில் செய்து வந்தனர் இத் தொழிலில் ஈடுபடும்போது திக்ரு செய்து கொண்டே நெசவு செய்வார்கள் பெண்கள் சில பேர் பீடி ஓட்டும் தொழில் சிலபேர் பீடி சுற்றும் தொழில் செய்துவந்தனர்.
ஒற்றுமை :
அன்றைய மக்கள் தொழுகையை தொழாவிட்டாலும் இறைவனுக்கு பயப்படுவார்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டாலும் கூட வீட்டில் ஏதாவது விசேசங்களுக்கு அல்லது பெருநாள் போன்ற சந்தோஷமான நாட்களில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் அது மட்டுமல்லாமல் அல்லாஹ் ரசூலுக்காக மன்னித்துவிடு என்று கூறிவிட்டால் எந்த ஒரு பெரிய சண்டை என்றாலும் மன்னித்து விடுவார்கள் மறந்து விடுவார்கள் வாசலில் வந்து தர்மம் கேட்கும் நபர்களுக்கு இல்லை என்று கூறாமல் கொடுப்பார்கள் கொடுக்க முடியாவிட்டால் கூட மாப் செய்யுங்கள் என கூறுவார்கள் அதாவது மன்னித்து விடுங்கள் என உருது கலந்து பேசுவார்கள். பெருநாள் போன்ற நாட்களிலும் கூட வீணான பொழுதாக ஆக்காமல் அன்றைய நாளில் கூட இறைவனை நினைவு கூறும் நோக்கத்தில் தப்ஸ் எனும் கொட்டடித்து அல்லாஹ், ரஸூல், வலிமார்கள் இவர்கள் மீது பாடல் இயற்றி புகழ்ந்த வண்ணம் கொண்டாடுவார்கள். ஆரம்ப கால கட்டத்தில் கலிபாக்களின் தலைமுறையினர்  மிசர் தேசத்தில் இருந்து  வந்ததால் தப்ஸ் அடித்து புகழ்வது  மிசர் தேசத்திலும் அங்குள்ள அராபிய நாடுகளிலும் உள்ள பழக்க வழக்கமாகும்   சினிமா படம் வந்த காலத்திலும் கூட ஊர் ஒன்று கூடி சினிமா பார்க்க கூடாது என தங்களுக்கு தாங்களே தடை செய்து சட்டம் போட்டுக்கொண்டனர் மீறி பார்க்க செல்பவர்களுக்கு அபராதம் போட்டு வந்தனர்  மேலும் மீலாது நபி மற்றும் வலிமார்கள் நினைவு தினங்களை கொண்டாடி மகிழ்வதோடு அல்லாமல் ஊரில் ஒன்று சேர்ந்து சமைத்து சாப்பிடுவார்கள் இதில் வசதி உடையவர்கள் அரிசி, பருப்பு, கறி  போன்ற உணவு பொருட்களை கொடுத்து விடுவதால் வீடுக்கு வீடு உணவுக்கு ஆகும் பணத்தை குறைவாக வாங்கி எளியோரும் குறைவான பணத்தில் உயர்ந்த  மணமான உணவை வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
 
விளையாட்டுக்கள்
விசேஷமான நாட்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் விளையாடுவார்கள், கபடி போன்ற விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்வார்கள் பெண்கள் தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதாக கூறப்படுகிறது
 
வெளிநாடு போக்குவரத்து
ஆண்கள் பர்மா ரங்கூன் போன்ற இடங்களில் வாணிபம் செய்து வந்தார்கள் அங்குள்ள உணவு இடியப்பம் வட்டிலாப்பம் இது தான் மேலப்பாளையத்தில் இன்றும் உயர்ந்த உணவாக உள்ளது பிறகு மலேசியா சிங்கபூர் செல்ல ஆரம்பித்தார்கள் அங்கு சென்றதால் அங்கு பேசப்படும் மொழிகளையும் கலந்து பேச ஆரம்பித்தார்கள் உதாரணமாக ஓகே என கூறுவது என்றால் ஓகே லா என லா சேர்த்து தான் பேசுவார்கள் இது நம்ம ஊர் பழக்கத்தில் போ அல்லது வா என கூறுவது என்றாலும் போ லா  வா லா என பேசுவதே இதற்க்கு காரணமாக உள்ளது பிறகு 1980 வருடத்திற்கு பிறகு சவூதிக்கு செல்ல ஆரம்பித்தார்கள் சவூதி ஏழ்மை நிலையிலிருந்து பெட்ரோல் கிடைக்க பெற்ற பின் சவூதி செழிப்போங்கியது ஆரம்ப கால கட்டத்தில் கலிபாக்களின் தலைமுறையினர்  மிசர்தேசத்தில் இருந்து கேரளா வழியாக நமது ஊர் வந்தார்கள் இதுபோன்று ஏழ்மை இன் காரணமாகவும் ஆரம்ப காலத்தில் நிறையப்பேர் புறப்பட்டுவிட்டனர் மிசர் கட்டுப்பாடில் இருந்த மக்கா மதீனாவும் சவூதிக்கு சேர்ந்து விட்டதால் மிசர் தேசத்திற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மட்டுமே மிஞ்சியது ரியாத்தை தலை நகராக கொண்ட சவூதிக்கு மக்காவும் மதீனாவும் சொந்தமாகிவிட்டது சவூதிக்கு சென்ற நமது ஊர் மக்கள் சவூதி அரபியாவின் கலாச்சாரம்  இவர்களை தொற்றிக்கொண்டது சவூதி செழிப்போங்கிய காரணத்தால் 1400  வருடம் கழித்து சென்ற நம்ம ஊர்வாசிகளுக்கு புதிய கலாச்சாரத்தை பார்த்து இது தான் இஸ்லாமி நாடு என அங்கு சென்று வந்த பிறகு நமது ஊர் மக்களின் பழைய வாழ்க்கை, ஒற்றுமை மறைந்து வருகிறது

தெருக்களுக்கு பெயர் வந்தது எப்படி
ஆங்கில ஆட்சியில் இங்கு குதிரை வீரர்களை ராவுத்தர் என அழைப்பார்கள்  ஆகவே மேலப்பாளையம் ராவுத்தர் தெருவில் குடி இருந்ததால் அந்த தெருவிற்கு ராவுத்தர் தெரு என பெயர் வந்ததாக கூறப்படுகிறது மேலும் பல நல்லோர்கள் வந்து சென்றதாலும், பல நல்லோர்கள் இங்கு வாழ்ந்து மறைந்ததால் அவர்களின் பெயர்களும் தெருவிற்கு பெயராக அமைந்தது


100 face hith

ஆஷிகே ரசூல் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ் அவர்களின் வரலாறு

ஆஷிகே ரசூல் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ் அவர்களின் வரலாறு
 
பிறப்பு :
     மேலப்பாளையம் நகருக்கு வருகை தந்த ஏழு குடும்பங்களில் ஒன்றான தக்கரி என்ற தக்கடி என்னும் குடும்பத்தில்  தகப்பனார் உதுமான் லெப்பை அவர்களுக்கும் தாயார் ஹவ்வா உம்மாள் என்பவருக்கும் வெகு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 1141  முஹர்ரம் பிறை 6 ல் பிறந்தார்கள்.
 
அவரது இயற்பெயர்
இவர்களுக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் முஹம்மது முஹ்யித்தீன் என்பதாக வைத்தார்கள்.
 
குழந்தை பருவம்
குழந்தை முஹம்மது முஹ்யித்தீனுக்கு ஒரு வயதாக இருக்கும் போதே 'வைசூரி' (அம்மை நோய்) ஏற்பட்டு இரு கண்களும் பார்வையை இழந்தன.  இதை பெற்றோர்களால் நெடு நாட்களாக சகித்துக் கொள்ளமுடியவில்லை அவர்கள் குடும்பத்தின் சற்குருவான கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களிடம் அழைத்து சென்று சொல்லி துஆ செய்யுமாறு வேண்டினார்கள்
 
குரு, வளர்ப்பு மகனாக ஏற்றல்
குழந்தையின் வருங்கால  சிறப்பை அறிந்த மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் அப்பெற்றோரிடம் இந்த பிள்ளையை என்னிடமே விட்டு செல்லுங்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் என் பிள்ளையாக பார்த்து கொள்கிறேன் சென்றார்கள் அவர்களும் மஹான் உடைய வளர்ர்ப்பில் சிறப்பாக இருக்கும் என உணர்ந்து விட்டு சென்றார்கள்
 
கல்வி பருவம்
    பாலகர் முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் வீட்டிலேயே வளர்ந்தார்கள் குழந்தைக்கு கல்வி கற்று கொடுக்க விரும்பிய மஹான் அவர்கள் அவர் முதுகையே கரும்பலகையாக பயன்படுத்தி திருக்குரான் எழுத்துக்களை அவர் முதுகில் எழுதிக்காட்டி மனத்தால் அவர் உணரும் அளவுக்கு எழுதி சொல்லி கொடுத்தார் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ் அவர்கள் இவ்வாறு குர்ஆன் வசனங்களையும், நபிகள் நாயகம் (ஸல்லல்லஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளான ஹதீஸ் மற்றும் சட்ட திட்டங்களையும் கற்று கொண்டார்கள்
 
கிலுறு (அலை) அவர்களின் சந்திப்பு
    மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் மாணவர் முஹம்மது முஹ்யித்தீனுடன் யாரோ பேசிக்கொண்டிருப்பதுபோல் சத்தம்  கேட்டு உள்ளே வந்து பார்க்க யாருமில்லை மாணவர் மட்டுமே இருந்தார் 
மாணவரிடம் யாரோடு பேசிக் கொண்டிருந்தீர்கள் என கேட்டார். அதற்கு மஹான் அவர்கள் யார் என்று தெரியவில்லை குரல் உங்கள் குரல் போன்று இருந்தது அவர் எனது வாயை திறக்க சொன்னார் உடனே நான் வை திறந்தேன் அவர் எனது வாயினுள் அவரது உமிழ் நீரை உமிழ்ந்தார் நான் அதை அப்படியே விழுங்கி விட்டேன் அந்த உமிழ் நீர் நல்ல மதுரமானதொரு நீர் போன்று சுவை மிகுந்திருந்தது என்று மஹான் அவர்கள் கூறினார்கள்  கோஜ் அப்பா அவர்களாலும் தெரிய முடியவில்லை
உடனே அவர் காலத்தில் வாழ்ந்த மஹான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களிடம் சென்று நடந்த விபரத்தை கூறி கேட்டார்கள் அவர்கள் உடனே சொன்னார்கள் கிலுறு (அலை) அவர்கள் என்று கூறினார்கள் இதன் மூலம் வரும் காலத்தில் சிறந்த இறையருள் பெற்றவராக வருவார் என்பதயும் மஹான்  கோஜ் அப்பா அவர்கள் புரிந்து கொண்டார்கள்
 
இந்நிகழ்ச்சிக்கு பின் மஹான் அவர்கள் வாழ்க்கையில் பல மாறுதல்கள் உண்டாகின. அவர்கள் எப்போதும் தனித்திருக்க பிரியபட்டார்கள் பிறரிடம் அதிகமாக பேசுவதில்லை குறைவாகவே உண்டார்கள் அல்லாஹ்வை பற்றிய சிந்தனையே அவரிடம் இருந்து வந்தது
 
பைஅத் பெறுதல்
ஒரு நாள் சுஃபுஹூ தொழுகை முடிந்த பின் மஹான் அவர்கள் கோஜ் அப்பா அவர்களிடம் எனக்கு பைஅத் பெற எண்ணமாக உள்ளது பைஅத் தாருங்கள் என்றார்கள் அதற்கு கோஜ் அப்பா அவர்கள் சிறப்பு மிகு தகுதி பெற்றிருக்கும் உனக்கு நான் பைஅத் தருவது சரி அல்ல என் குரு தான்  உனக்கு குருநாதராக இருக்க முடியும் என்று கூறினார்கள் இதை கேட்ட பிள்ளை முஹம்மது முஹ்யித்தீன் (பஷீர் அப்பா) அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் எல்லாமே நடக்கும் என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார்கள் நாட்கள் செல்ல செல்ல மஹான் பஷீர் அப்பா அவர்களுக்கு இறை காதல் அதிகமாவதை கண்ட மஹான் கோஜ் அப்பா அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் என்ற ஊரில் தனது குருநாதர் சிஸ்தியா தரீக்காவில் புகழ் பெற்ற மஹான் ஷெய்கு உதுமான் வலியுல்லாஹ் அவர்களிடம் தன்னுடைய வளர்ப்பு பிள்ளையை அறிமுகம் செய்து வைத்தார்கள் கண் தெரியாத இந்த பிள்ளையின் ஆன்மீக உயர்வை விளங்கிய மஹான் ஷெய்கு உதுமான் வலியுல்லாஹ் அவர்கள் பை அத் கொடுத்து பஷீர் என்று அழைக்குமாறு கூறி தரீக்காவில் கலீபா பதவியும் கொடுத்தார்கள்
 
திருமண பருவம்
கோஜ் அப்பா அவர்கள் பிள்ளை பஷீருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஒருவர் தனது மகள் கமருன்னிசாவை பெண் கொடுக்க சம்மதித்து திருமணமும் இனிதாக நடை பெற்று முடிந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்க்கு கோஜ் அப்பா அவர்கள் பெயரே வைக்கப்பட்டது
 
மக்களுக்கு நல்லுரைகள்  (மக்களை நன்மையின் பக்கம் அழைத்தல் )மஹான் பஷீர் அப்பா அவர்களின் நல்லுரைகளை கேட்க்க மக்கள் கூட்டம் மேலப்பாளையம் ஊரில் அலைமோதியது ஒரு சமயம் இவர்கள் பேச்சை கேட்க்க வந்த பாளையங்கோட்டை ஆற்காடு நவாப் அவர்களின் சகோதரர் நவாப் மஹபூப் கான் அவர்கள் மஹான் அவர்களின்  பேச்சின் சிறப்பையும், உயர்வையும் அறிந்த அவர்கள் நன்கொடைகள் பல வழங்கியதுடன், அப்பா அவர்களிடம் பைஅத்தும் பெற்றார்கள் மேலும் மஹான் அவர்களின் உண்மை நிலையையும், தூர இடங்களில் உள்ளவைகளையும், நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் கஷ்ப் என்னும் தூரதரிசனம் பெற்றிருக்கும் ஆற்றலை அறிந்த மக்கள் மஹான் அவர்களை "ஷாயீர்," "ஆஷிக் ரசூல்,"  "தென்னாட்டு ஷெய்குல் அக்பர்,"  "மாமேதை,"  "பஷீர் அக்பர்" என பல சிறப்பு பெயர்களால் புகழ்ந்தார்கள் அவரிடம் பைஅத் பெறுபவர்கள் நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே இருந்தது.
 
மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் தமிழ் புலவராகவும் விளங்கினார்கள்   
 
 மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் அற்புதங்கள்
 
திருநெல்வேலி மாவட்டம் ஐயூப்கான்புரத்தில் இருந்து ஹஸனா லெப்பை, கலந்தர் லெப்பை என்ற இருவர் மஹான் அவர்களை சந்திக்க வந்தார்கள். வரும் வழியிலே தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு இருவரும் பஷீர் அப்பா அவர்களால் ஹதீஸை எல்லாம் படிக்க முடியாதே எப்படி நல்ல கருத்துக்களை சொல்ல முடியும் என பேசிக்கொண்டே வருகிறார்கள் இதை தன அகப்பார்வையால் அறிந்த மஹான் அவர்கள் வீட்டில் தன துணைவியாரிடம் விருந்தாளிகள் இரண்டு பேர் வருகிறார்கள் அவர்களுக்கு நெய் சோறு சமைக்கும் படி கூறினார்கள்
அவ்விருவரும் வீடு வந்ததும் வரவேற்று நீங்கள் மார்க்கம் சம்பந்தமான வினாக்களை கேட்க்க வந்துள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி அதக்கு முன்னால் நீங்கள் வரும் வழியில் தாமிரபரணி ஆற்றில் குளித்தீர்கள் குளிக்கும் முன் உங்களது பணப்பையை ஆற்றங்கரையிலுள்ள ஒரு கற்றாழை செடி அருகில் வைத்தீர்கள் அதை எடுக்காமல் வந்துவிட்டீர்கள் என்றதும் இருவரும் சென்று எடுத்து விட்டுவந்தார்கள் 
 
 பிறகு அப்பா அவர்களிடம் மர்ர்க்க அறிவு பெற்று குருவாக ஏற்று கலிபா உடைய அந்தஸ்தும் பெற்றார்கள் இவ்விரு கலிபாக்களும் ஐயூப் கான் புறத்திலுள்ள ஒரு தர்காவில் அடங்கப்பட்டுள்ளர்கள்
 
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொட்டல் புதூர் என்ற ஊரிலுள்ள முஹையதீன் ஆண்டகை அவர்களின் தர்காவில் சந்தன கூடு ஊர்வலம் நடக்கும் நிகழ்ச்சியை காண விரும்பி மஹான் அவர்களின் துணைவியார் பக்கத்து வீடு குடும்பத்தினருடன் சென்று வரலாம் என நினைத்து அப்ப்வுடைய வருகையை காத்திருந்தார்கள் நெடு நேரமாகியும் வராததால் பக்கத்து வீட்டு குடும்பத்தார் சென்று விட்டார்கள் மஹான் அவர்கள் வந்ததும் அவர் துணைவியார் கூறவே அப்பா அவர்கள் முஹையதீன் ஆண்டகை அவர்களின் சந்தன கூடு தானே பார்க்க வேண்டும் என்று சொல்லி தனது ஆள்காட்டி விரலால் பக்கத்திலுள் சுவரில் கோடு போட்டு பார்க்குமாறு கூறினார்கள் அதில் சந்தனகூடு ஊர்வலம் தெரிந்தது மட்டும் அல்லாமல் பக்கத்து வீட்டு குடும்பத்தினர் கை குழந்தையுடன் ஒரு கடையில் மிட்டாய் வாங்கியதையும் பார்த்தார்கள் அதே கடையின் மிட்டாயை மஹான் அவர்கள் தூனைவியருக்கு கொடுத்தார்கள் மறுநாள் அக்குடும்பத்தினர் வந்ததும் இந்நிகழ்ச்சியை கூறி விசாரித்து மிட்டயுடைய சுவை பற்றியும் சொன்னார்கள் பிறகு இந்நிகழ்ச்சி முற்றிலும் உண்மைதான் என அந்த குடும்பத்தினரும் கூறினர்
 
அப்பா அவர்களிடத்தில் பேரன்பு கொண்ட ஒரு துணி வியாபாரி இருந்தார் அவர் தலையில் சுமந்து கொண்டு துணிகளை விற்று வந்தார் அவருக்கு நாகூர் செல்ல வேண்டும் அப்பா அவர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பி பணம் சேர்த்து அப்பாவிடம் தன எண்ணத்தை சொன்னார் அதற்க்கு அப்பா அவர்கள் எனக்கு பார்வை இல்லை ஆகையால் நெடுதூர பயணம் செல்ல முடியாது என்று கூறிவிட்டு நக்கோர் போகும் சமையம் வந்துவிட்டு செல்லும் படியும் சொல்லிவிட்டார்கள் அதே போல் புறப்படும் சமயம் அப்பாவிடம் சொல்லவே அப்பா அவர்கள் ஒரு வெறும் தாளில் தன் ஆட்காட்டி விரலால் ஏதோ எழுதி ஒரு தலூரையில் போட்டு துணி வியாபாரிடம் கொடுத்து நாகூர் கந்தூரி முடிந்து மறுநாள் கடற்கரையில் பீரோட்டம் பார்க்க செலும் போது வழியில் ஒரு மரத்தடியில் பச்சை சால்வை போர்த்தி கில் ஆஸாவை வைத்துக்கொண்டு பக்கீர் போல் ஒருவர் இருப்பார் அவரிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிட்டு பதில் கடிதம் தருவார் வாங்கி வாருங்கள்  என்றார்கள் அதேபோல் அவர் சென்று கந்தூரி முடித்த மறுநாள் கடற்கரை சென்று பார்த்தார்கள் பக்கீர் அவர்கள் புன் முறுவலுடன் பார்த்து படித்துவிட்டு அவரும் தன் ஆட்காட்டி விரலால் ஏதோ எழுதி ஒரு தலூரையில் போட்டு கொடுத்தார்கள் பிறகு துணி வியாபாரி அப்பாவும்  மையோ, எழுத்துகோலோ இல்லாமல் எழுதுகிறார் இவரும் மையோ, எழுத்துகோலோ இல்லாமல் எழுதுகிறாரே என யோசித்துக்கொண்டு ஊர் வந்து கொடுத்து அந்த பக்கீர் பற்றி சொல்லி யார் என கேட்டார்கள் அப்பா அவர்கள் நீர் சந்திதீரே அவர்தான் நாகூர் ஆண்டகை என்றார்கள் கேட்டதும் துணி வியாபாரி கைசேதம் அடைந்தார்கள் உடனே அப்பா அவர்கள் வருத்தப்பட வேண்டாம் உங்களுக்கு ஆன்மீக பக்குவம் அவ்வளவு தான் என்றார்கள்
 
கல்வத் ஆண்டகை அவர்களும் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களும்
 
கல்வத் ஆண்டகை அவர்களின் இயற் பெயர் செய்யது அப்துல் காதர் இவர் கல்வத் என்னும் தனித்து இருந்து வணக்கம் புரிந்ததால் கல்வத் ஆண்டகை என்ற பெயர் உண்டாகியது
கல்வத் ஆண்டகை அவர்கள் பல நாட்கள் தனித்திருந்து வணங்கி வந்தார்கள் அப்போது ஒருநாள் ஓர் இரவில் அவகளின் வலது பக்கம் 500 புலிகளும் இடது பக்கம் 500 பாம்புகளும் நின்று பயமுறுத்துவதை போன்று உணர்ந்தார்கள் பூமிலிருந்து ஆகாயம் வரை நெருப்பு ஜுவாலைகள் பற்றி எரிந்ததாகவும் பார்த்தார்கள் இவற்றை கண்டு கல்வத் ஆண்டகை அவர்கள் மிகவும் அச்சமுற்றார்கள் அந்நேரத்தில் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் தோன்றி எனது மகனே நீர் ஒன்றும் பயப்பட வேண்டாம் னான் அனுபவித்த துயரங்களுக்கு இது எம்மாத்திரம் ? கொஞ்சமும் அஞ்சாமல் இரும் இத்தொல்லைகள் எல்லாம் விரைவில் தொலைந்துவிடும் என்று கூறி மறைந்தார்கள்
இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் புலவர் காளை ஹஸன் அவர்கள் 'கல்வத்மாலை' என்னும் நூலில் புகழ்ந்து கூறியுள்ளார்கள்
 
மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் இயற்றிய பாடல்கள்
 
1 . மெய்ஞான சதகம் 
2 . மெய்ஞான ஆனந்த களிப்பு
3 . நாகூரார் பிள்ளை தமிழ்
4 . வண்ணப்பாக்கள்
5 . கப்பல் பாட்டு
6 . ஞான இசைப் பாடல்கள்
இனிய தமிழில் பாடி உள்ளார்கள்
 
மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள்
 
1 .மேலப்பாளையம் தைக்கா புலவர் ஷாகுல் ஹமீது புலவர்  'முனாஜாத்து ' என்னும் பாடலையும்,
2 . மேலப்பாளையம் பள்ளி உதுமான் லெப்பை 'மவ்லீத்' என்னும் பாடலையும்
3 . அப்துல் ஹமீது லெப்பை ஆலிம் அவர்கள் 'பாமாலை' என்னும் பாடலையும்
4 . மேலப்பாளையம் கல்வத் கலீபா யூசுப் நாயகம் அவர்களின் அரபி பைத்தையும்,
5 . மேலப்பாளையம் ஜமால் செய்யது முஹம்மது ஆலிம் அவர்கள் 'பஷீர் அப்பா மாலை' என்னும் பாடலையும் பாடி உள்ளார்கள் .
 
 
 மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் மறைவு
 
ஞானப்புலவர் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் 75  ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார்கள்
ஹிஜ்ரி 1216 ரஜப் பிறை 19  ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். இவர் அடக்கஸ்தலம் மேலப்பாளையம் கடைய ஜும்மா பள்ளியின் தென் புறத்தில் உள்ளது.
 
இவரது ஆஷிகீன்கள் முரீதுகள் அதிகம் பேர் உள்ளனர்.
 
 
இவண்
 
 100 Face  hith
 

Wednesday, October 27, 2010

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை

 பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள்
1  . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ் (ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி)
பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்
பெண் மக்கள்
1  . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி)
ஆண் மக்கள்
1  . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ்  (ரலி)
3 . இப்ராஹீம்  (ரலி)
பெருமானார் (ஸல்) அவர்களின் அடிமைகள்

1  . ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி)
2 . ஷக்ரான் (ரலி)
3 . அபூரா.:பி.: (ரலி)
4 . ஸல்மானுல் .:பார்ஸி (ரலி)
5 . ஸ.:பீனா (ரலி)
6 .  அபூகப்ஜீஷா (ரலி)
7 . ருவை.:பி.: (ரலி)
8 . ரபாஹூல் அஸ்வத் (ரலி)
9 . .:பழாலா (ரலி)
10 . மித்அம் (ரலி)
பாச நபி (ஸல்) அவர்களின் பாதுகாவலர்கள்
 
1  . அபூபக்கர் சித்திக் (ரலி)
2 . ஸ .:து  இப்னு முஆத்  (ரலி)
3 . முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி)
4 . ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி)
5 . முகீரதுப்னு ஷு.:பாஹ்  (ரலி)
6 .  அபூ அய்யூபுல்  அன்ஸாரி  (ரலி)
7 . பிலால் இப்னு ரபாஹ் (ரலி)
8 . ஸ.: து இப்னு அபீவக்காஸ் (ரலி)
9 . தக்வான் (ரலி)
10 .  இப்னு அபீ மர்ஸத்  (ரலி)
நீதி நபி (ஸல்) அவர்களின் நிர்வாகஸ்தர்கள்
1  . அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப் (ரலி)
2 . பிலால் (ரலி)
3 . அஸத்  இப்னு உஸைத் (ரலி)
4 .  முஐகீப் (ரலி)
கவிஞர்கள்
1  . ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி)
2 .  அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி)
3 .  க.:ப் இப்னு மாலிக் (ரலி)
முஅத்தினாக நியமனம் செய்யப்பட்ட நான்கு பேர்கள்
1  . பிலால் (ரலி)
2 .  அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி)
3 . ஸ.:துல்கர்ள்  (ரலி)
4 .  அபூ மஹ்தூரா (ரலி)
 பணியாளர்கள்
ஆண்கள்
1  . அனஸ் இப்னு மாலிக்  (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்  (ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 .  அஸ்க.: இப்னு ஷரீக்  (ரலி)
பெண்கள்
1  . அமதுல்லாஹ் இப்னு ரஸீனா (ரலி)
2 .  மாரியா (ரலி)
3 .  கெளலா (ரலி)
பெருமானார் (ஸல்) அவர்களின்                            

குதிரைகள்                                     ஒட்டகங்கள்
1  . ஸக்ப்      
2 . முர்தஜிஸ்                                      1 . கஸ்வா
3 .  லஹீ.:ப்                                          2 . ஜத்ஆ.:
4 .  லிஜாஜ்                                           3 . ஆழ்பா.:  
5 .  ளரி.:ப்
6 .  வர்த்
7 .  ஸப்ஹா
8 .  ய.:சூப்
வாள்கள்                                             உருக்கு சட்டைகள்  
 
1  . ம.:தூர்                                            1  . தாதுல் .:புழூல்
2 .   ஆழ்ப்                                            2 .   தாதுல் விஹாஷ் 
3 .  துல்.:பிகார்                                  3 .  தாதுல் ஹவாஷீ
4 .   ஸம்ஸமா                                 4 .  ஸ.:பரிய்யா
5 .  கலயீ                                             5 . .:பிழ்ழத்  
6 .   ஹீ.:ப்                                            6 .  பத்ரா.:
7 .   ரஸூப்                                         7 . கிர்னிக்
8 .   மிக்தம்
9 .   கலீப்
 
வில்கள்                                ஈகை நபி(ஸல்) அவர்களின் ஈட்டிகள்

1  . பைளா.:                                 1  . முஸ்னா
2 .  ரவ்ஹா.:                              2 .   முஸ்வீ
3 .  ஸ.:ப்ரா                                 
4 .  ஜவ்ரா.:                                
5 .  சதாத்             
 இஸ்லாமிய போர் 
           போரின் பெயர்                          பிறை                       ஹிஜ்ரி
1 .        பத்ரு போர்                                 ரமலான்                         01 
2 .        உஹது போர்                             ஷவ்வால்                      03               
3 .       சவீக் சண்டை                           ஷவ்வால்                      03 
4 .       பனு முஸ்தலிக் போர்         ஷ.:பான்                          05
5 .       அஹழ் போர்                             ஷ.:பான்                          05
6 .       கைபர் போர்                               ஷ.:பான்                          07
7 .       மூத்தாப்  போர்                           ஷ.:பான்                          07
8 .       மக்கா வெற்றி                            ஷவ்வால்                      08
9 .       ஹூனைன்  போர்                    ஷவ்வால்                     09
10 .      தபூக்  போர்                                  ரஜப்                                 09
11 .       தாயிப் போர்                                                                         09
நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம் பற்றி
நபிமார்கள்                       வேதம்             பாஷை      
மூஸா (அலை)            தவ்ராத்            இப்ரானி
தாவூத் (அலை)            ஸபூர்               யூனானி
ஈஸா (அலை)              இன்ஜீல்           ஸூர்யானி
முஹம்மது (ஸல்)    குர்ஆன்            அரபி
க.:பா கட்டுவதற்கு கல் எடுக்கப்பட்ட மலைகள்
1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா
கட்டியவர் : இப்ராஹீம் (அலை) , இஸ்மாயில் (அலை)
மனிதனின் அந்தஸ்துகள் (தரஜாக்கள் )
முதலில் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்
1 .     மனிதன்
2 .    முஸ்லிம்
3 .    மு.:மின்
4 .     ஸாலிஹ்
5 .     முத்தகீன்
6 .     வலியுல்லாஹ்
7 .     நுகபா
8 .     நுஜபா
9 .     அப்தால்
10 .    அக்யார்
11 .    ஆரி.:பீன்
12 .    அன்வார்
13 .    அவ்தாத்
14 .    முக்தார்
15 .    இமாமனி
16 .    குதுப் 
17 .    தாபியீ
18 .    சஹாபி
19 .    அன்சாரி 
20 .    முஹாஜிரி 
21 .    ஷஹீத் 
22 .    சித்திக் 
23 .    நபி 
24 .    ரஸூல்
25 .   உலுல் அஜ்ம்
26 .   கலீலுல்லாஹ் 
27 .   உலக முழுமைக்கும் ரஸூல்
28 .   காத்தமுன் நபி
29 .   ரஹ்மத்தில் ஆலமீன்
30 .   ஹபீபுல்லாஹ்
நபிமார்கள் மொத்தம்               -  1 24 000    பேர்
ரஸூல்மார்கள்                            -           313   பேர்
குர்ஆனில் சொல்லப்பட்ட
நபிமார்கள்                                     -           25     பேர்
313 பேரில் உலுல் அஜ்ம்        -             5      பேர்
1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்)
திருக்குர்ஆனின் வசனம் -     6666
சொற்கள்                                   -     75430
எழுத்துக்கள்                             -    326671
சுவர்க்கத்தின் பெயர்கள்
1 . தாருல் மகாம்
2 . தாருல் ஸலாம்
3 . ஜன்னத்துல் ம.:வா
4 . ஜன்னத்துல் நயீம்
5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ்
6 . ஜன்னத்துல் அத்னு
7 . இல்லியூன்
8 . ரைய்யான்
நான்கு வகை உயிர்கள்
1 . ரூஹுல் ஜிமாத்           -  ஜடப்பொருள்
2 . ரூஹுல் நபாத்து         -   தாவர உயிர்
3 . ரூஹுல் ஹைவான்  -   பிராணி  உயிர்
4 . ரூஹுல் இன்சான்      -   மனித  உயிர்
நப்ஸின் ஏழு வகைகள்
1 .    நப்ஸ் அம்மாரா
2 .    நப்ஸ் லவ்வாமா
3 .    நப்ஸ்  முத்மாயின்னா
4 .     நப்ஸ் முல்ஹிமா
5 .     நப்ஸ்  ராலிய்யா
6 .     நப்ஸ்  மர்லிய்யா
7 .     நப்ஸ் காமிலா
மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்
1 .    தபக்கஹூத்துஸ் தூர்
2 .    தபக்கத்துல் கல்பி
3 .    தபக்கத்துஷ் ஷிகாப்
4 .     தபக்கத்துல் .:புஆத்
5 .     தபக்கத்து ஹூப்பத்துல் கல்லி
6 .     இல்முல்லதுன்னி
7 .     தபக்கத்துஸ் ஸுவைதா
  

Saturday, October 23, 2010

17 .10 .2010 அன்று நடந்த மார்க்க விளக்க கூட்டம் பற்றிய

 17 .10 .2010  அன்று சுன்னத் ஜமாஅத் ஐக்கிய  பேரவையின் சார்பாக டவுன் பள்ளி இமாம் அப்துல் காதிர் ஆலிம் உஸ்மானி அவர்கள் தலைமையில் மேலப்பாளையம் பஜார் திடலில்  வைத்து கூட்டம் நடை பெற்றது
கூட்டத்தில் V .S .T . அமானுல்லாஹ் அவர்கள் வஹாபிகளின் வீழ்ச்சி என்ற தலைப்பிலும், தூத்துக்குடி பேராசிரியர் முஸ்தபா மஸ்லரி அவர்கள்  சென்னையில் நடந்த விவாதத்தின் தலைப்பில் இறைவனுக்கு உருவம் இல்லை என்று சுன்னத் ஜமாஅத் சொன்ன விஷயத்தை அழகாகவும் தெளிவாகவும் இலக்கணத்தை பாமர, படிக்காத மக்களுக்கும் தெரியும் அளவிற்கு எடுத்துச் சொன்னார்.
 
கூட்டம் முடிந்ததும் T .N .T .J  வை சேர்ந்த சில வாலிபர்கள் வந்து நேரடியாக வந்து முஸ்தபா மஸ்லரி அவர்களிடம் வந்து கேள்விகளை  கேட்டார்கள் அதற்கும் பதில் சொன்னார். அந்த வாலிபர்கள் நாம் தவறான வழியில் உள்ளோமோ என  சிந்திக்க தொடங்கி விட்டார்கள் இன்ஷா அல்லாஹ் அவர்களும் நேர் வழிபெற துஆச் செய்வோமாக !
 
செய்திக்காக
மேலப்பாளையம் முஹம்மது காசிம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய  பேரவை

Sunday, October 10, 2010

SJAP மேலப்பாளையம் செய்தி

சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை சார்பாக 9 .10 .2010 சனிக்கிழமை அன்று ஹாமீம்புரம் வடக்கு தெருவில் 
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை ன் செயலாளர் Er . V.S.T .அமானுல்லாஹ் அவர்களின் வீட்டில்   வைத்து செயற்குழு கூட்டம்
N S M  மீரான் மைதீன் மன்பயி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் Er . பஷீர் பிலாலி அவர்களும் Er .A P அப்துல் காதர் அவர்களும் V N அலி ஹுசைன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
 
கூட்டத்தின் தீர்மானம்
1  ஜனாஸா வைப்பதற்கு குளிருட்டப்பட்ட பெட்டி வாங்குவது பற்றியும்
2  அதை கொண்டு போக ஒரு ஆம்புலன்ஸ் வேன் வாங்குவது பற்றியும்
3  17 . 10 .2010  அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் கூட்டம் நடத்துவது பற்றியும்
மேலும் பல நல திட்டங்கள் ஏற்படுத்துவது பற்றியும் பேசப்பட்டது