Thursday, October 28, 2010

ஆஷிகே ரசூல் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ் அவர்களின் வரலாறு

ஆஷிகே ரசூல் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ் அவர்களின் வரலாறு
 
பிறப்பு :
     மேலப்பாளையம் நகருக்கு வருகை தந்த ஏழு குடும்பங்களில் ஒன்றான தக்கரி என்ற தக்கடி என்னும் குடும்பத்தில்  தகப்பனார் உதுமான் லெப்பை அவர்களுக்கும் தாயார் ஹவ்வா உம்மாள் என்பவருக்கும் வெகு நாட்கள் கழித்து ஹிஜ்ரி 1141  முஹர்ரம் பிறை 6 ல் பிறந்தார்கள்.
 
அவரது இயற்பெயர்
இவர்களுக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் முஹம்மது முஹ்யித்தீன் என்பதாக வைத்தார்கள்.
 
குழந்தை பருவம்
குழந்தை முஹம்மது முஹ்யித்தீனுக்கு ஒரு வயதாக இருக்கும் போதே 'வைசூரி' (அம்மை நோய்) ஏற்பட்டு இரு கண்களும் பார்வையை இழந்தன.  இதை பெற்றோர்களால் நெடு நாட்களாக சகித்துக் கொள்ளமுடியவில்லை அவர்கள் குடும்பத்தின் சற்குருவான கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களிடம் அழைத்து சென்று சொல்லி துஆ செய்யுமாறு வேண்டினார்கள்
 
குரு, வளர்ப்பு மகனாக ஏற்றல்
குழந்தையின் வருங்கால  சிறப்பை அறிந்த மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் அப்பெற்றோரிடம் இந்த பிள்ளையை என்னிடமே விட்டு செல்லுங்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் என் பிள்ளையாக பார்த்து கொள்கிறேன் சென்றார்கள் அவர்களும் மஹான் உடைய வளர்ர்ப்பில் சிறப்பாக இருக்கும் என உணர்ந்து விட்டு சென்றார்கள்
 
கல்வி பருவம்
    பாலகர் முஹம்மது முஹ்யித்தீன் அவர்கள் மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் வீட்டிலேயே வளர்ந்தார்கள் குழந்தைக்கு கல்வி கற்று கொடுக்க விரும்பிய மஹான் அவர்கள் அவர் முதுகையே கரும்பலகையாக பயன்படுத்தி திருக்குரான் எழுத்துக்களை அவர் முதுகில் எழுதிக்காட்டி மனத்தால் அவர் உணரும் அளவுக்கு எழுதி சொல்லி கொடுத்தார் மஹான் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ் அவர்கள் இவ்வாறு குர்ஆன் வசனங்களையும், நபிகள் நாயகம் (ஸல்லல்லஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளான ஹதீஸ் மற்றும் சட்ட திட்டங்களையும் கற்று கொண்டார்கள்
 
கிலுறு (அலை) அவர்களின் சந்திப்பு
    மஹான் கோஜ் முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்கள் கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் மாணவர் முஹம்மது முஹ்யித்தீனுடன் யாரோ பேசிக்கொண்டிருப்பதுபோல் சத்தம்  கேட்டு உள்ளே வந்து பார்க்க யாருமில்லை மாணவர் மட்டுமே இருந்தார் 
மாணவரிடம் யாரோடு பேசிக் கொண்டிருந்தீர்கள் என கேட்டார். அதற்கு மஹான் அவர்கள் யார் என்று தெரியவில்லை குரல் உங்கள் குரல் போன்று இருந்தது அவர் எனது வாயை திறக்க சொன்னார் உடனே நான் வை திறந்தேன் அவர் எனது வாயினுள் அவரது உமிழ் நீரை உமிழ்ந்தார் நான் அதை அப்படியே விழுங்கி விட்டேன் அந்த உமிழ் நீர் நல்ல மதுரமானதொரு நீர் போன்று சுவை மிகுந்திருந்தது என்று மஹான் அவர்கள் கூறினார்கள்  கோஜ் அப்பா அவர்களாலும் தெரிய முடியவில்லை
உடனே அவர் காலத்தில் வாழ்ந்த மஹான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களிடம் சென்று நடந்த விபரத்தை கூறி கேட்டார்கள் அவர்கள் உடனே சொன்னார்கள் கிலுறு (அலை) அவர்கள் என்று கூறினார்கள் இதன் மூலம் வரும் காலத்தில் சிறந்த இறையருள் பெற்றவராக வருவார் என்பதயும் மஹான்  கோஜ் அப்பா அவர்கள் புரிந்து கொண்டார்கள்
 
இந்நிகழ்ச்சிக்கு பின் மஹான் அவர்கள் வாழ்க்கையில் பல மாறுதல்கள் உண்டாகின. அவர்கள் எப்போதும் தனித்திருக்க பிரியபட்டார்கள் பிறரிடம் அதிகமாக பேசுவதில்லை குறைவாகவே உண்டார்கள் அல்லாஹ்வை பற்றிய சிந்தனையே அவரிடம் இருந்து வந்தது
 
பைஅத் பெறுதல்
ஒரு நாள் சுஃபுஹூ தொழுகை முடிந்த பின் மஹான் அவர்கள் கோஜ் அப்பா அவர்களிடம் எனக்கு பைஅத் பெற எண்ணமாக உள்ளது பைஅத் தாருங்கள் என்றார்கள் அதற்கு கோஜ் அப்பா அவர்கள் சிறப்பு மிகு தகுதி பெற்றிருக்கும் உனக்கு நான் பைஅத் தருவது சரி அல்ல என் குரு தான்  உனக்கு குருநாதராக இருக்க முடியும் என்று கூறினார்கள் இதை கேட்ட பிள்ளை முஹம்மது முஹ்யித்தீன் (பஷீர் அப்பா) அவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் எல்லாமே நடக்கும் என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார்கள் நாட்கள் செல்ல செல்ல மஹான் பஷீர் அப்பா அவர்களுக்கு இறை காதல் அதிகமாவதை கண்ட மஹான் கோஜ் அப்பா அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் என்ற ஊரில் தனது குருநாதர் சிஸ்தியா தரீக்காவில் புகழ் பெற்ற மஹான் ஷெய்கு உதுமான் வலியுல்லாஹ் அவர்களிடம் தன்னுடைய வளர்ப்பு பிள்ளையை அறிமுகம் செய்து வைத்தார்கள் கண் தெரியாத இந்த பிள்ளையின் ஆன்மீக உயர்வை விளங்கிய மஹான் ஷெய்கு உதுமான் வலியுல்லாஹ் அவர்கள் பை அத் கொடுத்து பஷீர் என்று அழைக்குமாறு கூறி தரீக்காவில் கலீபா பதவியும் கொடுத்தார்கள்
 
திருமண பருவம்
கோஜ் அப்பா அவர்கள் பிள்ளை பஷீருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஒருவர் தனது மகள் கமருன்னிசாவை பெண் கொடுக்க சம்மதித்து திருமணமும் இனிதாக நடை பெற்று முடிந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்க்கு கோஜ் அப்பா அவர்கள் பெயரே வைக்கப்பட்டது
 
மக்களுக்கு நல்லுரைகள்  (மக்களை நன்மையின் பக்கம் அழைத்தல் )மஹான் பஷீர் அப்பா அவர்களின் நல்லுரைகளை கேட்க்க மக்கள் கூட்டம் மேலப்பாளையம் ஊரில் அலைமோதியது ஒரு சமயம் இவர்கள் பேச்சை கேட்க்க வந்த பாளையங்கோட்டை ஆற்காடு நவாப் அவர்களின் சகோதரர் நவாப் மஹபூப் கான் அவர்கள் மஹான் அவர்களின்  பேச்சின் சிறப்பையும், உயர்வையும் அறிந்த அவர்கள் நன்கொடைகள் பல வழங்கியதுடன், அப்பா அவர்களிடம் பைஅத்தும் பெற்றார்கள் மேலும் மஹான் அவர்களின் உண்மை நிலையையும், தூர இடங்களில் உள்ளவைகளையும், நடப்பவைகளை தெரிந்து கொள்ளும் கஷ்ப் என்னும் தூரதரிசனம் பெற்றிருக்கும் ஆற்றலை அறிந்த மக்கள் மஹான் அவர்களை "ஷாயீர்," "ஆஷிக் ரசூல்,"  "தென்னாட்டு ஷெய்குல் அக்பர்,"  "மாமேதை,"  "பஷீர் அக்பர்" என பல சிறப்பு பெயர்களால் புகழ்ந்தார்கள் அவரிடம் பைஅத் பெறுபவர்கள் நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே இருந்தது.
 
மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் தமிழ் புலவராகவும் விளங்கினார்கள்   
 
 மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் அற்புதங்கள்
 
திருநெல்வேலி மாவட்டம் ஐயூப்கான்புரத்தில் இருந்து ஹஸனா லெப்பை, கலந்தர் லெப்பை என்ற இருவர் மஹான் அவர்களை சந்திக்க வந்தார்கள். வரும் வழியிலே தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு இருவரும் பஷீர் அப்பா அவர்களால் ஹதீஸை எல்லாம் படிக்க முடியாதே எப்படி நல்ல கருத்துக்களை சொல்ல முடியும் என பேசிக்கொண்டே வருகிறார்கள் இதை தன அகப்பார்வையால் அறிந்த மஹான் அவர்கள் வீட்டில் தன துணைவியாரிடம் விருந்தாளிகள் இரண்டு பேர் வருகிறார்கள் அவர்களுக்கு நெய் சோறு சமைக்கும் படி கூறினார்கள்
அவ்விருவரும் வீடு வந்ததும் வரவேற்று நீங்கள் மார்க்கம் சம்பந்தமான வினாக்களை கேட்க்க வந்துள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி அதக்கு முன்னால் நீங்கள் வரும் வழியில் தாமிரபரணி ஆற்றில் குளித்தீர்கள் குளிக்கும் முன் உங்களது பணப்பையை ஆற்றங்கரையிலுள்ள ஒரு கற்றாழை செடி அருகில் வைத்தீர்கள் அதை எடுக்காமல் வந்துவிட்டீர்கள் என்றதும் இருவரும் சென்று எடுத்து விட்டுவந்தார்கள் 
 
 பிறகு அப்பா அவர்களிடம் மர்ர்க்க அறிவு பெற்று குருவாக ஏற்று கலிபா உடைய அந்தஸ்தும் பெற்றார்கள் இவ்விரு கலிபாக்களும் ஐயூப் கான் புறத்திலுள்ள ஒரு தர்காவில் அடங்கப்பட்டுள்ளர்கள்
 
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொட்டல் புதூர் என்ற ஊரிலுள்ள முஹையதீன் ஆண்டகை அவர்களின் தர்காவில் சந்தன கூடு ஊர்வலம் நடக்கும் நிகழ்ச்சியை காண விரும்பி மஹான் அவர்களின் துணைவியார் பக்கத்து வீடு குடும்பத்தினருடன் சென்று வரலாம் என நினைத்து அப்ப்வுடைய வருகையை காத்திருந்தார்கள் நெடு நேரமாகியும் வராததால் பக்கத்து வீட்டு குடும்பத்தார் சென்று விட்டார்கள் மஹான் அவர்கள் வந்ததும் அவர் துணைவியார் கூறவே அப்பா அவர்கள் முஹையதீன் ஆண்டகை அவர்களின் சந்தன கூடு தானே பார்க்க வேண்டும் என்று சொல்லி தனது ஆள்காட்டி விரலால் பக்கத்திலுள் சுவரில் கோடு போட்டு பார்க்குமாறு கூறினார்கள் அதில் சந்தனகூடு ஊர்வலம் தெரிந்தது மட்டும் அல்லாமல் பக்கத்து வீட்டு குடும்பத்தினர் கை குழந்தையுடன் ஒரு கடையில் மிட்டாய் வாங்கியதையும் பார்த்தார்கள் அதே கடையின் மிட்டாயை மஹான் அவர்கள் தூனைவியருக்கு கொடுத்தார்கள் மறுநாள் அக்குடும்பத்தினர் வந்ததும் இந்நிகழ்ச்சியை கூறி விசாரித்து மிட்டயுடைய சுவை பற்றியும் சொன்னார்கள் பிறகு இந்நிகழ்ச்சி முற்றிலும் உண்மைதான் என அந்த குடும்பத்தினரும் கூறினர்
 
அப்பா அவர்களிடத்தில் பேரன்பு கொண்ட ஒரு துணி வியாபாரி இருந்தார் அவர் தலையில் சுமந்து கொண்டு துணிகளை விற்று வந்தார் அவருக்கு நாகூர் செல்ல வேண்டும் அப்பா அவர்களை அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பி பணம் சேர்த்து அப்பாவிடம் தன எண்ணத்தை சொன்னார் அதற்க்கு அப்பா அவர்கள் எனக்கு பார்வை இல்லை ஆகையால் நெடுதூர பயணம் செல்ல முடியாது என்று கூறிவிட்டு நக்கோர் போகும் சமையம் வந்துவிட்டு செல்லும் படியும் சொல்லிவிட்டார்கள் அதே போல் புறப்படும் சமயம் அப்பாவிடம் சொல்லவே அப்பா அவர்கள் ஒரு வெறும் தாளில் தன் ஆட்காட்டி விரலால் ஏதோ எழுதி ஒரு தலூரையில் போட்டு துணி வியாபாரிடம் கொடுத்து நாகூர் கந்தூரி முடிந்து மறுநாள் கடற்கரையில் பீரோட்டம் பார்க்க செலும் போது வழியில் ஒரு மரத்தடியில் பச்சை சால்வை போர்த்தி கில் ஆஸாவை வைத்துக்கொண்டு பக்கீர் போல் ஒருவர் இருப்பார் அவரிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிட்டு பதில் கடிதம் தருவார் வாங்கி வாருங்கள்  என்றார்கள் அதேபோல் அவர் சென்று கந்தூரி முடித்த மறுநாள் கடற்கரை சென்று பார்த்தார்கள் பக்கீர் அவர்கள் புன் முறுவலுடன் பார்த்து படித்துவிட்டு அவரும் தன் ஆட்காட்டி விரலால் ஏதோ எழுதி ஒரு தலூரையில் போட்டு கொடுத்தார்கள் பிறகு துணி வியாபாரி அப்பாவும்  மையோ, எழுத்துகோலோ இல்லாமல் எழுதுகிறார் இவரும் மையோ, எழுத்துகோலோ இல்லாமல் எழுதுகிறாரே என யோசித்துக்கொண்டு ஊர் வந்து கொடுத்து அந்த பக்கீர் பற்றி சொல்லி யார் என கேட்டார்கள் அப்பா அவர்கள் நீர் சந்திதீரே அவர்தான் நாகூர் ஆண்டகை என்றார்கள் கேட்டதும் துணி வியாபாரி கைசேதம் அடைந்தார்கள் உடனே அப்பா அவர்கள் வருத்தப்பட வேண்டாம் உங்களுக்கு ஆன்மீக பக்குவம் அவ்வளவு தான் என்றார்கள்
 
கல்வத் ஆண்டகை அவர்களும் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களும்
 
கல்வத் ஆண்டகை அவர்களின் இயற் பெயர் செய்யது அப்துல் காதர் இவர் கல்வத் என்னும் தனித்து இருந்து வணக்கம் புரிந்ததால் கல்வத் ஆண்டகை என்ற பெயர் உண்டாகியது
கல்வத் ஆண்டகை அவர்கள் பல நாட்கள் தனித்திருந்து வணங்கி வந்தார்கள் அப்போது ஒருநாள் ஓர் இரவில் அவகளின் வலது பக்கம் 500 புலிகளும் இடது பக்கம் 500 பாம்புகளும் நின்று பயமுறுத்துவதை போன்று உணர்ந்தார்கள் பூமிலிருந்து ஆகாயம் வரை நெருப்பு ஜுவாலைகள் பற்றி எரிந்ததாகவும் பார்த்தார்கள் இவற்றை கண்டு கல்வத் ஆண்டகை அவர்கள் மிகவும் அச்சமுற்றார்கள் அந்நேரத்தில் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் தோன்றி எனது மகனே நீர் ஒன்றும் பயப்பட வேண்டாம் னான் அனுபவித்த துயரங்களுக்கு இது எம்மாத்திரம் ? கொஞ்சமும் அஞ்சாமல் இரும் இத்தொல்லைகள் எல்லாம் விரைவில் தொலைந்துவிடும் என்று கூறி மறைந்தார்கள்
இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் புலவர் காளை ஹஸன் அவர்கள் 'கல்வத்மாலை' என்னும் நூலில் புகழ்ந்து கூறியுள்ளார்கள்
 
மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் இயற்றிய பாடல்கள்
 
1 . மெய்ஞான சதகம் 
2 . மெய்ஞான ஆனந்த களிப்பு
3 . நாகூரார் பிள்ளை தமிழ்
4 . வண்ணப்பாக்கள்
5 . கப்பல் பாட்டு
6 . ஞான இசைப் பாடல்கள்
இனிய தமிழில் பாடி உள்ளார்கள்
 
மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள்
 
1 .மேலப்பாளையம் தைக்கா புலவர் ஷாகுல் ஹமீது புலவர்  'முனாஜாத்து ' என்னும் பாடலையும்,
2 . மேலப்பாளையம் பள்ளி உதுமான் லெப்பை 'மவ்லீத்' என்னும் பாடலையும்
3 . அப்துல் ஹமீது லெப்பை ஆலிம் அவர்கள் 'பாமாலை' என்னும் பாடலையும்
4 . மேலப்பாளையம் கல்வத் கலீபா யூசுப் நாயகம் அவர்களின் அரபி பைத்தையும்,
5 . மேலப்பாளையம் ஜமால் செய்யது முஹம்மது ஆலிம் அவர்கள் 'பஷீர் அப்பா மாலை' என்னும் பாடலையும் பாடி உள்ளார்கள் .
 
 
 மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களின் மறைவு
 
ஞானப்புலவர் மஹான் பஷீர் அப்பா வலியுல்லாஹ் அவர்கள் 75  ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார்கள்
ஹிஜ்ரி 1216 ரஜப் பிறை 19  ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். இவர் அடக்கஸ்தலம் மேலப்பாளையம் கடைய ஜும்மா பள்ளியின் தென் புறத்தில் உள்ளது.
 
இவரது ஆஷிகீன்கள் முரீதுகள் அதிகம் பேர் உள்ளனர்.
 
 
இவண்
 
 100 Face  hith
 

1 comment: