மேலப்பாளையம் உருவான வரலாறு
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் கலீபாக்களாகிய அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) உஸ்மான் (ரலி) அலி (ரலி)
ஆகியோரின் பரம்பரையினர் மிஸ்ர் தேசம் என்று அழைக்கப்படும் எகிப்தில் 'ஹலரத் மவ்த்' என்ற ஊர் இருந்தது அங்கு வாழ்ந்து வந்தனர் இவர்களின் தொழில் நெசவு செய்வது. இந்த வம்சத்தினர் ஹிஜ்ரி 232 ல் புறப்பட்டு கப்பல் மூலம் இந்தியாவின் தெற்கு பகுதில் உள்ள கேரளா மாநிலத்திலுள்ள கொச்சியை வந்தடைந்தார்கள் ஒவ்வொரு கலீபாவின் வம்சத்திலிருந்து 10 பேர் வந்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது இதில்
அலி (ரலி) அவர்கள் பரம்பரையினர் 10 பெரும் கேரளாவிலுள்ள கொல்லம் என்ற பகுதியில் தங்கி விட்டனர் மீதி 3 கலீபாக்கள் தலைமுறையினர் கோட்டாறு, காயல்பட்டினம், இலங்கை, பரங்கிபேட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மங்கை நகர் என முன்னால் அழைக்கப்பட்ட மேலப்பாளையம் ஊரிலும் வசித்து வர தொடங்கினர்
மங்கை நகர் என்ற மேலப்பாளையம் பாளையம்கோட்டை என்ற பாளையம் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கு மேல் பகுதியில் இருந்ததால் மேலப்பாளையம் என்று அழைக்கப்பட்டது.
இந்த ஊரில் 11 பேர் குடியேறியதாக வரலாறு கூறுகிறது ஏழு குடும்பம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது தர்வேசு, சப்பாணி, தக்கரி என்ற தக்கடி, முஹம்மது லெப்பை, மாயாட்டி, பள்ளி, கட்டை ஆகிய குடும்பம்கள் வாழ்ந்து வந்தார்கள்
100 face hith

தொழில் :
இந்த ஊரில் குடியேறிய மக்களில் பெரும்பாலோர் வெளிஊர்வாசிகளே. வடகரை, உடன்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து குடியேறினார்கள் இங்கு பெரும்போலோர் நெசவு தொழில் செய்து வந்தனர் இத் தொழிலில் ஈடுபடும்போது திக்ரு செய்து கொண்டே நெசவு செய்வார்கள் பெண்கள் சில பேர் பீடி ஓட்டும் தொழில் சிலபேர் பீடி சுற்றும் தொழில் செய்துவந்தனர்.
ஒற்றுமை :
அன்றைய மக்கள் தொழுகையை தொழாவிட்டாலும் இறைவனுக்கு பயப்படுவார்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டாலும் கூட வீட்டில் ஏதாவது விசேசங்களுக்கு அல்லது பெருநாள் போன்ற சந்தோஷமான நாட்களில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் அது மட்டுமல்லாமல் அல்லாஹ் ரசூலுக்காக மன்னித்துவிடு என்று கூறிவிட்டால் எந்த ஒரு பெரிய சண்டை என்றாலும் மன்னித்து விடுவார்கள் மறந்து விடுவார்கள் வாசலில் வந்து தர்மம் கேட்கும் நபர்களுக்கு இல்லை என்று கூறாமல் கொடுப்பார்கள் கொடுக்க முடியாவிட்டால் கூட மாப் செய்யுங்கள் என கூறுவார்கள் அதாவது மன்னித்து விடுங்கள் என உருது கலந்து பேசுவார்கள். பெருநாள் போன்ற நாட்களிலும் கூட வீணான பொழுதாக ஆக்காமல் அன்றைய நாளில் கூட இறைவனை நினைவு கூறும் நோக்கத்தில் தப்ஸ் எனும் கொட்டடித்து அல்லாஹ், ரஸூல், வலிமார்கள் இவர்கள் மீது பாடல் இயற்றி புகழ்ந்த வண்ணம் கொண்டாடுவார்கள். ஆரம்ப கால கட்டத்தில் கலிபாக்களின் தலைமுறையினர் மிசர் தேசத்தில் இருந்து வந்ததால் தப்ஸ் அடித்து புகழ்வது மிசர் தேசத்திலும் அங்குள்ள அராபிய நாடுகளிலும் உள்ள பழக்க வழக்கமாகும் சினிமா படம் வந்த காலத்திலும் கூட ஊர் ஒன்று கூடி சினிமா பார்க்க கூடாது என தங்களுக்கு தாங்களே தடை செய்து சட்டம் போட்டுக்கொண்டனர் மீறி பார்க்க செல்பவர்களுக்கு அபராதம் போட்டு வந்தனர் மேலும் மீலாது நபி மற்றும் வலிமார்கள் நினைவு தினங்களை கொண்டாடி மகிழ்வதோடு அல்லாமல் ஊரில் ஒன்று சேர்ந்து சமைத்து சாப்பிடுவார்கள் இதில் வசதி உடையவர்கள் அரிசி, பருப்பு, கறி போன்ற உணவு பொருட்களை கொடுத்து விடுவதால் வீடுக்கு வீடு உணவுக்கு ஆகும் பணத்தை குறைவாக வாங்கி எளியோரும் குறைவான பணத்தில் உயர்ந்த மணமான உணவை வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
விளையாட்டுக்கள்
விசேஷமான நாட்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் விளையாடுவார்கள், கபடி போன்ற விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்வார்கள் பெண்கள் தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதாக கூறப்படுகிறது
வெளிநாடு போக்குவரத்து
ஆண்கள் பர்மா ரங்கூன் போன்ற இடங்களில் வாணிபம் செய்து வந்தார்கள் அங்குள்ள உணவு இடியப்பம் வட்டிலாப்பம் இது தான் மேலப்பாளையத்தில் இன்றும் உயர்ந்த உணவாக உள்ளது பிறகு மலேசியா சிங்கபூர் செல்ல ஆரம்பித்தார்கள் அங்கு சென்றதால் அங்கு பேசப்படும் மொழிகளையும் கலந்து பேச ஆரம்பித்தார்கள் உதாரணமாக ஓகே என கூறுவது என்றால் ஓகே லா என லா சேர்த்து தான் பேசுவார்கள் இது நம்ம ஊர் பழக்கத்தில் போ அல்லது வா என கூறுவது என்றாலும் போ லா வா லா என பேசுவதே இதற்க்கு காரணமாக உள்ளது பிறகு 1980 வருடத்திற்கு பிறகு சவூதிக்கு செல்ல ஆரம்பித்தார்கள் சவூதி ஏழ்மை நிலையிலிருந்து பெட்ரோல் கிடைக்க பெற்ற பின் சவூதி செழிப்போங்கியது ஆரம்ப கால கட்டத்தில் கலிபாக்களின் தலைமுறையினர் மிசர்தேசத்தில் இருந்து கேரளா வழியாக நமது ஊர் வந்தார்கள் இதுபோன்று ஏழ்மை இன் காரணமாகவும் ஆரம்ப காலத்தில் நிறையப்பேர் புறப்பட்டுவிட்டனர் மிசர் கட்டுப்பாடில் இருந்த மக்கா மதீனாவும் சவூதிக்கு சேர்ந்து விட்டதால் மிசர் தேசத்திற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மட்டுமே மிஞ்சியது ரியாத்தை தலை நகராக கொண்ட சவூதிக்கு மக்காவும் மதீனாவும் சொந்தமாகிவிட்டது சவூதிக்கு சென்ற நமது ஊர் மக்கள் சவூதி அரபியாவின் கலாச்சாரம் இவர்களை தொற்றிக்கொண்டது சவூதி செழிப்போங்கிய காரணத்தால் 1400 வருடம் கழித்து சென்ற நம்ம ஊர்வாசிகளுக்கு புதிய கலாச்சாரத்தை பார்த்து இது தான் இஸ்லாமி நாடு என அங்கு சென்று வந்த பிறகு நமது ஊர் மக்களின் பழைய வாழ்க்கை, ஒற்றுமை மறைந்து வருகிறது
தெருக்களுக்கு பெயர் வந்தது எப்படி
தெருக்களுக்கு பெயர் வந்தது எப்படி
ஆங்கில ஆட்சியில் இங்கு குதிரை வீரர்களை ராவுத்தர் என அழைப்பார்கள் ஆகவே மேலப்பாளையம் ராவுத்தர் தெருவில் குடி இருந்ததால் அந்த தெருவிற்கு ராவுத்தர் தெரு என பெயர் வந்ததாக கூறப்படுகிறது மேலும் பல நல்லோர்கள் வந்து சென்றதாலும், பல நல்லோர்கள் இங்கு வாழ்ந்து மறைந்ததால் அவர்களின் பெயர்களும் தெருவிற்கு பெயராக அமைந்தது
100 face hith
அஸ்ஸலாமு அழைக்கும் good news ஆதார நூலின் பெயர் என்ன எங்கு கிடைக்கும் பதியவும்
ReplyDeleteவாயிலிருந்து வரும் வார்த்தைகளெல்லாம் வரலாறு ஆகிவிடாது
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete